விமான பயணங்களுக்கான கட்டணத்தை எயார் பிரான்ஸ் (Air France) நிறுவனம் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

எரிபொருள் கட்டணங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து இந்த பயணக்கட்டணம் அதிகரித்துள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இரஷ்யா-உக்ரைன் போரை அடுத்து உலகம் முழுவதும் எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதேவேளை, அதன் விலைகளும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக விமானங்களுக்கான எரிபொருளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றத்தை அடுத்து, எயார் பிரான்ஸ் நிறுவனம் தனது பயணக்கட்டணத்தை 15% இல் இருந்து 20% வீதமாக அதிகரித்துள்ளது.

மார்ச் 17 ஆம் திகதி முதல் இந்த புதிய கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளதாக, அந்நிறுவனத்தின் பொது முகாமையாளர் Marc Rochet அறிவித்துள்ளார்.

இந்த விலையேற்றத்தை அடுத்து, நீண்ட தூர பயணங்களுக்கான கட்டணம் சராசரியாக €40 யூரோக்களில் இருந்து €100 யூரோக்கள் வரை கட்டண அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.