RATP தொடருந்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

வரும் மார்ச் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. பல்வேறு தொழிற்சங்கங்கள் தங்கள் ஊழியர்களை இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளது. சம்பள உயர்வை கோரி இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது.

முன்னதாக பெப்ரவரி 18 ஆம் திகதி அன்று, இதே காரணத்துக்காக வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்கள். அன்றைய தினம் எட்டு மெற்றோ சேவைகள் மற்றும் RER சேவைகள் பல தடைப்பட்டிருந்தன.

இந்நிலையில், மீண்டும் அதேபோன்றதொரு மாபெரும் வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வேலை நிறுத்தத்தினால் பாதிக்கப்படும் தொடருந்து சேவைகள் குறித்த தகவல்கள் எதுவும் தற்போது வெளியிடப்படவில்லை.