வெள்ளிக்கிழமை Saint-Denis நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
மாலை 6.30 மணி அளவில் Emaillerie பகுதியில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச்சூடு தொடர்பான விரிவான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்றபோதும், இதில் பாதசாரிகள் இருவர் காயமடைந்துள்ளதாக அறிய முடிகிறது..
காயடமைந்தவர்கள் இருவரும் பெண்கள் எனவும், அவர்களில் ஒருவர் கர்ப்பிணி தாய் எனவும் அறிய முடிகிறது.
இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கர்ப்பிணி பெண் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் Saint-Denis நகர முதல்வர் தெரிவித்துள்ளார்