Burkina Faso நாட்டில், பிரெஞ்சு இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்காவின் Burkina Faso நாட்டில் இத்தாக்குதல் சம்பவம் பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பிரெஞ்சு இராணுவத்தினர், ஆளில்லா விமானம் மூலம் (Drone) நடத்திய தாக்குதலில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் இடம்பெற்ற
பகுதியில், அண்மையில் மாலி மற்றும் பிரெஞ்சு இராணுவத்தினர் பயணித்த வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் பிரெஞ்சு இராணுவ வீரர் ஒருவர் உட்பட ஒன்பது வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பயங்கரவாதிகள் கூட்டாக மோட்டார் சைக்கிள்களில் பயணித்தபோது பிரெஞ்சு இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக பிரெஞ்சு இராணுவ தளபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது