பிரான்சுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் கொரோனா பரிசோதனைகள் முடிவுகள் சமர்ப்பிக்கத்தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தளர்வு, குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும். கொரோனா பரவல் குறைந்த - பச்சை நிற வலயத்துக்குட்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டுமே இந்த தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும், தடுப்பூசி போடாதவர்கள் தொடர்ந்தும் 48 மணிநேரத்துக்குட்பட்ட எதிர்மறை முடிவுகளுடன் கூடிய PCR அறிக்கையுடன் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும், அல்லது அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.