மகிழுந்து ஒன்று ஆற்றுக்குள் பாய்ந்ததை அடுத்து, அதில் பயணித்த நால்வர் சாவடைந்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை Pontivy (Morbihan) நகரில் இடம்பெற்றுள்ளது. நால்வர் கொண்ட குழு பயணித்த மகிழுந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி Brest ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது. இச்சம்பவத்தில் மகிழுந்தில் பயணித்த நால்வரும் சாவடைந்துள்ளனர்.
சாவடைந்த்வர்களில் மூவர் 22 வயதுடையவர்கள் எனவும், நான்காமவர் 23 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதசாரி ஒருவர் வழங்கிய தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்றனர். காலை 9 மணிக்கு அவர்கள் அங்கு சென்றிருந்தனர். இருந்த போதும் நிலமை கைமீறிச் சென்றிருந்தது.
மகிழுந்து ஆற்றுக்குள் பாய்ந்ததற்குரிய காரணங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.