பாடசாலைகளில் முகக்கவசம் அணிவது தொடர்பாக கல்வி அமைச்சர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பாடசாலைகளில் உள்ளர அரங்குகளில், நெருக்கமான இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனும் சட்டம், வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவுக்கு வரும் என கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மிக விரைவில் இந்த தளர்வு கொண்டுவரப்படும். இந்த கல்வியாண்டு நிறைவடைவதற்குள் முகக்கவசம் அணிவதில் தளர்வு கொண்டுவரப்பட முடியும் என தாம் நம்புவதாகவும் கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer தெரிவித்தார்.

புதிய கல்வி ஆண்டு ஆரம்பமாகும் போது மாணவர்கள் முகக்கவசம் அணியாமல் பாடசாலைகளுக்கு செல்ல முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.