உக்ரைனில் உள்ள பிரெஞ்சு தூதரகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உக்ரைன் தலைநகர் Kiev மீது இரஷ்யா மிக ஆக்ரோஷமாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது. அதையடுத்து Kiev நகரில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தை மேற்கு பிராந்தியத்தில் உள்ள Lviv நகருக்கு மாற்றப்பட்டுள்ளது. இத்தகவலை வெளியுறவுத்துறை அமைச்சர் Jean-Yves Le Drian தெரிவித்துள்ளார்.
******

மேலதிக செய்திகள்!

**நேற்று திங்கட்கிழமை இரவு ‘ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் விண்ண படிவத்தில் உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky கையெழுத்திட்டுள்ளார்.

**இரஷ்யா-உக்ரைன் தூதுவர்களுக்கிடையே நேற்று இடம்பெற்ற சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. அதையடுத்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

**நேற்றைய தினம் ‘மக்ரோன்-விளாடிமிர் புட்டின்’ இருவருக்கிடையில் ஒன்றரை மணிநேரம் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி மக்ரோன் வைத்திருந்த மூன்று கோரிக்கைகளை இரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஏற்றுக்கொண்டுள்ளார்