இரஷ்யா மீது பொருளாதார யுத்தம் தொடுக்கப்பட்டுள்ளதாக பிரான்சின் பொருளாதார அமைச்சர் Bruno Le Maire அறிவித்துள்ளார்.
அனைத்து வழிகளிலும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகளை ஏற்படுத்தி, பொருளாதார யுத்தத்தினை முன்னெடுத்துள்ளோம் எனவும், ‘இது இரஷ்யாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் எனவும், விளாடிமிர் புட்டின் உக்ரைனில் இருந்து தனது துருப்புக்களை மீள அழைக்கும் வரை இந்த ‘பொருளாதார யுத்தம்’ தொடரும் என அமைச்சர் Bruno Le Maire தெரிவித்துள்ளார்.
இன்று காலை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொண்டு மேற்படி தகவலை வெளியிட்டார்.
******இரஷ்யா மீது பல்வேறு தடைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. கூகுள் தரப்பில், இரஷ்யாவுக்கான கூகுள் மப் (Google Map) மற்றும் யூடியூப்பில் (Youtube) இருந்து பணம் பெற முடியாது என தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
**இன்று காலை நெட்ஃபிளிக்ஸ் (Netflix) இரஷ்யாவில் சேவை நிறுத்தத்தை அறிவித்தது.
**யுத்தம் ஆரம்பித்த முதல் நான்கு நாட்களில் 5,700 இரஷ்ய இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊகம் செய்தி வெளியிட்டுள்ளது.
**உக்ரைனுக்கு அவுஸ்திரேலியா 50 மில்லியன் டொலர்கள் பெறுமதியுள்ள ஆயுதங்களை வழங்கியுள்ளது.
**இரஷ்யா மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
**உக்ரைனின் Okhtyrka நகரில் இடம்பெற்ற தாக்குதலில் 70 உக்ரைன் இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.