பிரான்ஸ்: கோவிட்-19: தடுப்பூசி போட விரும்பும் போலி பாஸ் வைத்திருப்பவர்கள், வழக்குத் தொடரும் ஆபத்து இல்லாமல் தங்கள் நிலைமையை முறைப்படுத்த தடுப்பூசி மையத்திற்குச் செல்லலாம்! டிசம்பர் 30 அன்று, உள்துறை அமைச்சகம் குறைந்தது 192,000 தவறான பாஸ்களைக் கணக்கிட்டது.

தடுப்பூசி போட விரும்பும் தவறான பாஸ் வைத்திருப்பவர்கள் , இப்போது தடுப்புசி மையத்திற்குச் சென்று, வழக்குத் தொடரும் அபாயம் இல்லாமல் தங்கள் நிலைமையை ஒழுங்குபடுத்திக்கொள்ளலாம், என பொது நிர்வாகத்தால் அனைத்து சுகாதார நிபுணர்களுக்கும் பிப்ரவரி 14, திங்கள்கிழமை அனுப்பப்பட்ட செய்தி (PDF ஆவணம்) குறிப்பிடுகிறது.

டிசம்பர் 30 அன்று, உள்துறை அமைச்சகம் குறைந்தது 192,000 தவறான பாஸ்களைக் கணக்கிட்டது , ஆனால் இந்த எண்ணிக்கை சந்தேகத்திற்கு இடமின்றி அதிகமாகும்.

எனவே இந்த போலி தடுப்பூசி பாசை குறைப்பதற்காக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஒரு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் மக்கள் அனைவரும் இதை பயன்படுத்திக்கொண்டு தண்டனையில் இருந்து தப்பிக்குமாறும். அறிவுறுத்தப்பட்டுள்ளது.