ஒலியை அளவிடும் கருவி ஒன்று தலைநகர் பரிசில் பொருத்தப்பட்டுள்ளது.
பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள rue d'Avron வீதிக்கும் rue Tolain வீதிக்கும் இடைப்பட்ட சந்திப்பில் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது. நான்கு மீற்றர் உயரம் கொண்ட இந்த கருவி, அப்பகுதியில் பதிவாகும் ஒலியின் அளவை பதிவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருவி மூன்று கமராக்களை கொண்டது. ஒவ்வொரு கமராவும் தனித்தனியே நான்கு ஒலிவாங்கிகளை (Microphones) கொண்டது. இந்த கருவி அருகில் உள்ள அனைத்து ஒலிகளை கண்காணிக்கும்.
பரீட்சாத்த முயற்சியாக இந்த கருவிகள் தற்போது பொருத்தப்படுகின்றன. சில மாதங்கள் வரை இங்கு பொருத்தப்பட்டிருக்கும் இக்கருவி, பின்னர் இங்கிருந்து அகற்றப்பட்டு வேறு இடத்தில் பொருத்தப்படும்.
கருவி சேகரித்த தரவுகள் ஆராயப்பட்டு, அதன் பின்னர் இக்கருவி தொடர்பான மேலதிக முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கருவி, நேற்று பெப்ரவரி 14 ஆம் திகதி திங்கட்கிழமை பொருத்தப்பட்டது. பிரான்சில் ஒலியை அளவிடும் கருவி ஒன்று பொருத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.
2023 ஆம் ஆண்டின் கோடைகாலத்தில் இருந்து தலைநகர் பரிஸ் உட்பட பிரான்சில் பிரதான நகரங்கள் அனைத்திலும் இக்கருவிகள் பொருத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது