பெண் ஒருவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்து பல பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
பரிசில் இச்சம்பவம் இவ்வார திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. பரிஸ் 18 ஆம் வட்டாரத்தின் Goutte d'Or பகுதியில் வசிக்கும் 35 வயதுடைய பெண் ஒருவரது வீடே கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அன்று இரவு திடீரென வீட்டுக்குள் நுழைந்த மூன்று கொள்ளையர்கள், தனியே வசித்த அப்பெண்ணை ஆயுத முனையில் மிரட்டியுள்ளனர். அப்பெண்ணின் ஆடைகளை களைந்துவிட்டு, அவரை ஒரு கதிரையில் கட்டி வைத்தனர்.
பின்னர் வீட்டில் இருந்த நகைகள், பணம், கணணி உள்ளிட்டவற்றை திருடியுள்ளனர். அத்தோடில்லாமல் அவரது வங்கி அட்டையை திருடியதோடு, அதன் இரகசிய இலக்கத்தையும் கேட்டறிந்துகொண்டனர்.
பின்னர், கொள்ளையர்கள் மூவரில் ஒருவரை பண இயந்திரத்துக்கு அனுப்பி, வங்கியில் இருந்து €300 யூரோக்கள் பணத்தையும் எடுத்துக்கொண்டனர்.
பின்னர் மூவரும் மகிழுந்து ஒன்றில் ஏறி தப்பி ஓடியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை கொள்ளையர்கள் கைது செய்யப்படவில்லை