ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பளரான Marine Le Pen, தனக்கான பணம் வழங்கும் அனுசரணையாளர்களை பெற சிரமத்தை எதிர்கொள்கிறார்.

ஜனாதிபதி தேர்தல் 2022 ஆம் ஆண்டில் போட்டியிடும் வேட்பாளர்கள், 500 வரையான நிதி வழங்கும் அனுசரணையாளர்கள் கொண்ட பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். மார்ச் 4 ஆம் திகதிக்குள் அவர்கள் இந்த பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் கையளிக்க வேண்டும். இதுவரை இம்மானுவல் மக்ரோன், Anne Hidalgo மற்றும் Valérie Pécresse ஆகிய மூவரும் மட்டுமே தங்களுக்கான 500 அனுசரணையாளர்களை பெற்றுள்ளனர்.

நீண்டகாலமாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் Marine Le Pen, இதுவரை 198 அனுசரணையாளர்களை மட்டுமே பெற்றுள்ளார்.

இதனால் அவருக்கு பலத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அண்மைய கருத்துக்கணிப்புகளின் படி, இம்மானுவல் மக்ரோன் 26% வீத வாக்குகளுடன், Marine Le Pen 15% வீத வாக்குகளுடன் உள்ளனர். முதல் சுற்றில் வெற்றி பெறுவதற்குரிய போட்டி கடினமாக உள்ள நிலையில், அனுசரணையாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி என்பதும் Marine Le Pen இற்கு பெரும் பின்னடைவாக உள்ளது.