பிரான்சில் தாக்கிய இரண்டாவது புயல்! காரில் பயணித்த தம்பதியருக்கு நேர்ந்த பரிதாப முடிவு!பிரான்சை இரண்டு புயல்கள் தாக்கிய நிலையில் இரண்டாவது புயல் இரண்டு உயிர்களை பலி கொண்டுள்ளது வடக்கு பிரான்சில் Franklin புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் வயது முதிர்ந்த தம்பதியர் புயலுக்கு பலியாகியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை தங்கள் எழுபது வயதுகளில் இருக்கும் ஒரு கணவனும் மனைவியும் சென்ற கார் தண்ணீரில் மூழ்கியது. இரவு பத்து மணிவாக்கில் அவர்களது கார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தம்பதியர்கள் தப்ப வழியின்றி உயிரிழந்துள்ளார்கள்.
வெள்ளிக்கிழமை Eunice புயல் பிரான்சை தாக்க அதனால் மின்சாரம் தடைபட்டது. அதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இந்த புயல் வீசியதால் மின்சாரம் சீர் செய்யப்படாததால் சுமார் 12,000 பேர் இருளில் தவிக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்றை எதிர் கொண்டது.

மரங்கள் சாய்ந்ததால் பெரும்பாலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டது. சில இடங்களில் முற்றிலும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. Eunice புயல் காரணமாக கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பள்ளிகள் பல நேற்று திறக்கப்படவில்லை.