உலகில் மிகப்பெரிய தனியார் வங்கியான சுவிட்சர்லாந்து Credit Suisse வங்கியில் வைப்பு செய்த இலங்கையர் உட்பட உலகம் முழுவதும் பல நாடுகளை சேர்ந்த பாரதூரமான குற்றங்களுடன் தொடர்புடைய வாடிக்கையாளர்கள் பலரது தகவல்கள் வெளியாகியுள்ளன.
சித்ரவதை, போதைப்பொருள் கடத்தல், பண மோசடி, ஊழல் மற்றும் ஏனைய கடுமையான குற்றங்களில் தொடர்புள்ள வாடிக்கையாளர்களின் மறைமுகமான செல்வத்தை இந்த வங்கி கசிய விட்டுள்ளது. இதன் அடிப்படையில் 100 மில்லியன் சுவிஸ் பிராங்குகளுக்கும் அதிகமான பணம் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியாவில் வெளியாகும் ஒரு பத்திரிகை தெரிவித்துள்ளது.
இதன் மதிப்பு இலங்கை ரூபாயின் பெறுமதியில் 22 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் வெளியீட்டின் மூலம் உலகம் முழுவதும் உள்ள சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படும், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் பண சுத்திகரிப்பில் ஈடுபடும் மற்றும் ஏனைய பாரதூரமான குற்றங்களுடன் தொடர்புடைய 30 ஆயிரம் பேர் சுவிஸ் வங்கியில் வைப்பு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உலகில் உள்ள 120 நாடுகளைச் சேர்ந்த நபர்கள் இந்த வங்கியில் வைப்பு செய்துள்ளனர். இவர்களில் பிலிப்பைன்சின் மனித கடத்தல்காரர்கள் லஞ்சம் வாங்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்ட ஹாங்காங் பங்குச்சந்தை வர்த்தகர் லெபனான் பொப் நட்சத்திரம் காதலியை கொலை செய்ய உத்தரவிட்ட கோடிஸ்வரர்,
மற்றும் வெனிசுலாவில் அரசு எண்ணெய் நிறுவனத்தை கொள்ளை அடித்த நிர்வாகிகள் மற்றும் எகிப்து முதல் உக்ரைன் வரை ஊழல் செய்த அரசியல்வாதிகள் என அனைவரும் அடங்குவர். அவர்களில் இலங்கையை சேர்ந்த வாடிக்கையாளர்கள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியுடன் உலக வரைபடத்தில் இலங்கையும் குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ள முக்கியமானது எனினும் இலங்கையை சேர்ந்த நபர்களது பெயர் விபரங்களை பிரித்தானியா பத்திரிக்கை வெளியிடவில்லை.
இவ்வாறு தகவல் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1940 ஆம் ஆண்டு வரை நீண்டு செல்கிறது எனினும் வெளியிடப்பட்டுள்ள மொத்த வங்கிக் கணக்குகளில் மூன்றிலிரண்டு வங்கி கணக்குகள் 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட என தெரியவந்துள்ளது.