ரஸ்யாவிற்கான அனைத்துப் பறப்புகளையும் ஏற்கனவே இத்துச் செய்த பிரான்சின் தேசிய விமான சேவையான எயார் பிரான்ஸ் சீனா, ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளிற்கான விமானப் பறப்புகளையும் இரத்துச் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுளளது.

 
நாளாந்தம் பல பறப்புக்களை ரஸ்யாவின் தலைநகர் மொஸ்கோவிற்கும் முக்கிய நகரமான செய்ன் பீட்டர்ஸபேர்க்கிற்கும் நடாத்தி வந்த எயார் பிரான்ஸ் அவற்றை முற்றாக நிறுத்தி உள்ளது.ஐரோப்பிய வான் எல்லைக்குள் ரஸ்ய விமானங்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளன. 
 
அதனால் ரஸ்ய வான் பரப்பினூடாக மட்டுமே செல்லக்கூடிய சீனா, ஜப்பான், கொரியா ஆகியவற்றிற்கான விமான சேவைகளையும் எயார்பிரான்ஸ் இடைநிறுத்த வேண்டியுள்ளது.
 
இந்தப் பாதிப்பு ஐரோப்பாவின் மற்றைய தேசிய விமான சேவைகளிற்கும் ஏற்பட்டுள்ளது.
 
ஐரோப்பிய ஒன்றியம் ரஸ்ய விமானங்களிற்கான வான்பறப்பை தடைசெய்ததன் எதிரொலியாக ரஸ்யா தன் வான்பரப்பை ஐரோப்பிய விமானங்களிற்கு மூடியுள்ளது.
 
இதனால் ஐரோப்பிய விமானசேகைளிற்கு பொருளாதார இழப்பீடு ஏற்பட்டுள்ளது