கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா தொற்று மற்றும் சாவு விபரங்களை ஷ்ட்ஜ்ட்க்ட்க் வெளியிட்டுள்ளது.

அதன்படி, 53,623 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை கிட்டத்தட்ட 63,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.

மருத்துவமனையில் 25,264 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் 220 பேர் குறைவாகும்.

2,484 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 62 பேரால் இந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை 188 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ள நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 93 பேர் சாவடைந்துள்ளனர்.