பிரான்ஸின் பல பகுதிகளில் இருந்தும்
வாகனப் பேரணிகள் தலைநகர் பாரிஸ்
நோக்கிப் புறப்பட்டுள்ளன. அவை இன்று
சனிக்கிழமை மாலை நகரை நெருங்கக்
கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேரணியினர் நகரினுள் பிரவேசிப்பார்
களா அல்லது புற நகரில் ஒன்று திரள்வா
ர்களா என்பது தெரியவில்லை. ஆனால்
நகருக்கு வெளியே gorges de Franchards à Fontainebleau (Seine-et-Marne) பகுதியில்
இன்று மதியம் ஒன்று கூடுவதற்கு சார
திகள் அழைக்கப்பட்டுள்ளனர். 

சுமார் மூவாயிரம் வாகனங்கள் சகிதம்
ஐயாயிரம் பேர்வரை சுதந்திர வாகனப்
பேரணியில் இணைந்துள்ளனர் என்று
நேற்றிரவு வெளியான தகவல்கள் தெரி
வித்தன. பாரிஸ் நகரின் நுழைவாயில்
களில் தடையை மீறி வருகின்ற வாக
னங்களைத் தடுப்பதற்கான முழு ஏற்பா
டுகளுடன் ஆயிரக்கணக்கான பொலீ
ஸார் முழு ஆயத்த நிலையில் வைக்கப்
பட்டுள்ளனர்.வாகனங்களைத் தடுக்கக்
கூடிய பொலீஸ் புல்டோசர்கள் முக்கிய
வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

பாரிஸ் பொலீஸ் தலைமையகம் வாகனப்
பேரணியையும் அதனோடு இணைந்த
ஒன்று திரள்வுகளையும் தடை செய்துள்
ளது. பாரிஸ் நிர்வாக நீதிமன்ற நீதிபதி
ஒருவரும் அந்தத் தடையை மீள உறுதிப்
படுத்தியுள்ளார். 

இந்த வாகனப் பேரணிக்கான அழைப்பு 
கோவிட் சுகாதாரக் கட்டுப்பாடுகளையும்
மக்ரோனையும் எதிர்க்கின்ற தரப்பின
ரால் சமூக வலைத்தளங்கள் ஊடாக விடுக்கப்பட்டிருந்தது. கனடாவில் தடுப்
பூசி எதிர்ப்பாளர்கள் ஒட்டாவா உட்பட ஒன்ராறியோ பிராந்தியத்தை  பார ஊர்
திப் பேரணிகள் மூலம் முடங்கச் செய்து
ள்ளனர்.அதன் பிரதிபலிப்பாகவே ஐரோப்பாவிலும் "சுதந்திரத்துக்கான வாகனப் பேரணிகள்" கிளம்பியுள்ளன.

அமைதி பேணக் கோருகின்றார்
அதிபர் மக்ரோன்.. 

வாகனப் பேரணி குறித்துக் கருத்து வெளியிட்டிருக்கின்றார் அதிபர் மக்ரோன்."Ouest France"பத்திரிகைக்கு
வழங்கிய செவ்வியில் "உயர்வான அமை
தியைப் பேணுமாறு" ஆர்ப்பாட்டக்காரர்
களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

"கடந்த இரண்டு ஆண்டுகள் தொற்று நோ
யினால் நாம் ஒட்டுமொத்தமாகக் களைத்
துப்போய் இருக்கிறோம்.சில சமயங்க
ளில் களைப்பு ஆத்திரமாக மாற்றம் எடுக்
கிறது. அதனை ஏற்றுக்கொள்கிறேன்.
மதிக்கிறேன். ஆயினும் உயர்ந்த அமை
தியைப் பேணுமாறு அழைப்பு விடுக்கி
றேன் " இவ்வாறு மக்ரோன் தெரிவித்தி
ருக்கிறார்.

படம் :தயார் நிலையில்  தடை உடைக்கும் பொலீஸ்