இல் து பிரான்சுக்குள் தற்போது துளிர்விட்டுள்ள Convoi de la liberté ஆர்ப்பாட்டத்தை கைவிடவேண்டும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கோரிக்கை வைத்துள்ளார்.
ஜனாதிபதி மக்ரோன் தெரிவிக்கையில் ‘au plus grand calme’ எனும் வார்த்தைகளை பயன்படுத்தி, நாம் பேரமைதி ஒன்றை கண்டடையவேண்டும் என வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் உங்களது கோபத்தினை மதிக்கின்றேன். சுகாதார நிலமைகளால் நாம் அனைவரும் மன அமைதியை இழந்துவிட்டோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் அனுபவித்த சிரமங்களால் நாம் அனைவருமே சோர்வடைந்துவிட்டோம். இந்த சோர்வு கோபமாக உருவெடுக்கின்றது. எனக்கு புரிகின்றது. நாம் அனைவரும் கூட்டாக சேர்ந்து பேரமைதியான சூழ்நிலையை உருவாக்கவேண்டும்” என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை Ouest-France ஊடகத்துக்கு செவ்வி அளிக்கும் போது ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இதனை குறிப்பிட்டார்.