தொடருந்து நிலையம் ஒன்றில் வைத்து பெண் ஒருவர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் உள்ள Porte-des-Lilas தொடருந்து நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பகல் 3 மணி அளவில் 31 வயதுடைய ஒருவர் தொடருந்து நிலைய பாதுகாவலர்களால் கைது செய்யப்பட்டார். தொடருந்து நிலைய படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்த 47 வயதுடைய பெண் ஒருவர் மீது குறித்த பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளார்.

குறித்த பெண்ணின் ஆடைக்குள் தனது கையை நுழைத்துள்ளார். அப்பெண் சத்தமாக கூச்சலிட்டதோடு, குறித்த நபரை கீழே தள்ளி உள்ளார்.

தொடருந்து நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த RATP பாதுகாவலர்கள் உடனடியாக குறித்த நபரை கைது செய்தனர். பின்னர் காவல்துறையினர் அழைக்கப்பட்டு அவர்களிடம் குறித்த நபர் ஒப்படைக்கப்பட்டார்.