மார்ச் மாத நடுப்பகுதியுடன் முகக்கவசம் அணிவதை நீக்கலாம் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை காலை சுகாதார அமைச்சர் Olivier Véran இதனை தெரிவித்தார். ‘கொரோனா பரவல் குறைவடைகின்றது. மார்ச் மாத நடுப்பகுதியில் கொரோனா பரவல் முற்றாக குறைந்து- மருத்துவமனைகளில் உள்ள நெருக்கடிகள் குறைந்தால் முகக்கவசம் அணிவதை நீக்கலாம். உள்ளக (indoors) இடங்களில் முகக்கவசம் அணிவதில் விலக்கு கொண்டுவரலாம்!’ என அவர் தெரிவித்தார்.

சிறுவர்கள் மற்றும் வயதுவந்தோர் அனைவருக்கும் இந்த தளர்வு கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் Olivier Véran தெரிவித்தார்.