தொடருந்து ஊழியர்கள் மாபெரும் வேலை நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 18 ஆம் திகதி) இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. RATP தொடருந்து நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களே இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். CGT, FO, Unsa, Solidaires மற்றும் La Base ஆகிய தொழிற்சங்க ஊழியர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.

ஊழிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. அத்தோடு பரிசில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் முன்னெடுக்க உள்ளனர்.

RATP தொடருந்து நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்களும் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால், அன்றைய தினம் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.