கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா வைரஸ் மரணங்கள் மற்றும் மருத்துவமனை நிலவரங்களை Santé publique France வெளியிட்டுள்ளது.

ஆனால், புதிதாக பதிவான தொற்று விபரங்கள் வெளியிடப்படவில்லை.

அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 2,614 பேர் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 296 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மருத்துவமனையில் 32,878 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 3503 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 255 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர். 133,540 பேர் இதுவரை பிரான்சில் கொரோனா வைரஸ் காரணமாக சாவடைந்துள்ளனர்.