தடுப்பூசி அட்டை பயன்படுத்துவது வரும் ஏப்ரல் மாதத்தோடு நிறைவுக்கு வரும் ஊடக பேச்சாளர் Gabriel Attal நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்று புதன்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தை அடுத்து, ஊடகத்துக்கு பேட்டியளித்த Gabriel Attal இதனை தெரிவித்தார்.

‘கொரோனா பரவல் வீழ்ச்சியடைய ஆரம்பித்துள்ளது. மருத்துவமனைகளில் இருந்து பெறப்படும் தரவுகள் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது. மருத்துவமனைகளில் நெருக்கடி குறைந்து, இயல்பு நிலைக்கு திரும்பும் பட்சத்தில் தடுப்பூசி அட்டை (pass vaccinal) பயன்பாடும் தாமாக வழக்கொழியும். மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத ஆரம்பத்தில் தடுப்பூசி அட்டைகள் பயன்பாடு இல்லாமல் போகும் என நான் நம்புகின்றேன்!’ என Gabriel Attal தெரிவித்தார்.

‘சுகாதார நிலமைகள் நெருக்கடியை தராத போது தடுப்பூசி அட்டைகள் பயனற்று போகும்!’ என மீண்டும் Gabriel Attal அழுத்தமாக குறிப்பிட்டார்.