உக்ரைன் நாட்டு ஜனாதிபதியுடன் இம்மானுவல் மக்ரோன் இன்று இரவு சந்திப்பு ஒன்றை நிகழ்த்துகின்றார்.
இன்று இரவு 8.30 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறுகின்றது. உக்ரைன்-இரஷ்யா நாடுகளுக்கிடையே இடம்பெற்றுவரும் முறுகல் நிலையை அடுத்து, இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய தலைவராக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் செயற்படுகின்றார்.
அதையடுத்தே இன்று இரவு 8.30 மணிக்கு உக்ரைன் நாட்டு ஜனாதிபதி Volodymyr Zelensky இனை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சந்திக்கின்றார்.
அதேவேளை, நாளை, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு இரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினை இம்மானுவல் மக்ரோன் சந்திக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது