Bobigny நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு 8 மணிக்கு சற்று முன்னதாக Paul-Eluard பகுதியில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
காவல்துறையினர் மற்றும் மருத்துவ உதவிக்குழுவினர் அழைக்கப்பட்டனர். அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணைகளை பொபினி நகர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.