சில கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளை சற்று முன்னர் ஊடக பேச்சாளர் Gabriel Attal அறிவித்துள்ளார்.

குறிப்பாக, நாளை புதன்கிழமை முதல் ‘இரவு விடுதிகள்’ மீண்டும் திறக்கப்படுகின்றதாக குறிப்பிட்டார். அதேபோல் பொது இடங்களில், திரையரங்குகளில், பொது போக்குவரத்துகளில் வைத்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுகின்றது.

இதுவரை மதுச்சாலைகள், உணவகங்களில் நின்றுகொண்டு உணவருந்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், நாளை முதல் அவற்றுக்கும் அனுமதி அளிக்கப்படுகின்றது.

இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் நிறைவில், ஊடகத்துக்கு பேட்டியளித்த Gabriel Attal, மேற்படி தளர்வுகளை வெளியிட்டார்.

“திட்டமிட்டபடி அனைத்து கட்டுப்பாடுகளையும் தளத்த நாம் தயாராகியுள்ளோம்.” எனவும் அவர் தெரிவித்தார்.