சிறுவர்களுக்கான தடுப்பூசி போடுவதில் பிரான்ஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
2021 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி முதல் பிரான்சில் 5-11 வயதுடைய சிறுவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி ஆரம்பமாகியிருந்தது. கிட்டத்தட்ட ஆறு வாரங்கள் கடந்த நிலையில், பிரான்சில் இதுவரை 4% வீதமான சிறுவர்களுக்கே இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இது மிகவும் பின்னடைவான பதிவாகும். குறிப்பாக ஸ்பெயினில் 52% வீதமான சிறுவர்களுக்கும், இத்தாலியில் 28% வீதமான சிறுவர்களுக்கும், ஜெர்மனியில் 16% வீதமான சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதேவேளை, 10 வயதுக்கு கீழ் உள்ள 600 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 106 சிறுவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.