கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டிருந்த சில கட்டுப்பாடுகள் இன்று திங்கட்கிழமை பெப்ரவரி 28 ஆம் திகதியுடன் தளர்த்தப்படுகின்றன.

முகக்கவசம்!

இன்று முதல் முகக்கவசம் அணிவதில் சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி திரையரங்கம், கலை அரங்குகள், அருங்காட்சியகம், உணவகம் மற்றும் அருந்தகங்களில் முகக்கவசம் அணியத்தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பொது போக்குவரத்துக்களில் பயணிக்கும் போது முகக்கவசம் அணிவது தொடர்ந்தும் கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கொரோனா பரிசோதனை!

கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஒரே ஒரு கொரோனா பரிசோதனை முடிவு அறிக்கை சமர்ப்பித்தால் போது என அறிவிக்கப்பட்டுள்ளது. தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்துஅவர்கள் இரண்டு நாட்களுக்குள் Antigenic, PCR அல்லது சுய பரிசோதனை முடிவுகளை சமர்த்தால் போதுமானது. அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என அதில் உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் எவ்வித தனிமைப்படுத்தலுக்கும் உள்ளாகத்தேவையில்லை. (இது தடுப்பூசி போட்டுள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்!)

பாடசாலைகளில் தளர்வு!

இன்று முதல் zone A பிரிவு பாடசாலைகள் அனைத்தும் இரண்டாம் கட்ட (niveau 2) கட்டுப்பாடுகளை பின்பற்றினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பெப்ரவரி 11 ஆம் திகதி Zone B பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளிலும் இதே தளர்வு கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.