மருத்துவ காப்புறுதியில் மோசடி செய்து ஒருவர் சொந்த வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இச்சம்பவம் Isère நகரில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான முதல் குற்றச்சாட்டு கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. போலியான மருத்துவ சான்றிதழ்களை வழங்கி, ஒருவர் மோசடி செய்துள்ளார். அவர் Voiron (Isère) நகரில் பணிபுரியும் தாதியர் எனவும், மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் அறிய முடிகிறது. இதுவரை கிட்டத்தட்ட €400.000 யூரோக்கள் இதுபோன்று 'மருத்துவ காப்புறுதியில்' இருந்து பெற்றுக்கொண்டுள்ளார் எனவும், அனைத்தும் போலியான ஆவணங்கள் மூலம் பெற்றுக்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, குறித்த தொகையை கொண்டு சொந்தமாக வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார் எனவும் அறிய முடிகிறது.