பிரான்சின் சுகாதார மந்திரி ஆலிவர் வேரன் திங்களன்று பாரிஸுக்கு அருகிலுள்ள ஒரு மருத்துவமனையில் அஸ்ட்ராசெனெகா கோவிட் -19 தடுப்பூசியை முதன்முதலில் பெற்றார்.

இது நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து வைரஸ் பரவலுக்கும் போதுமான பாதுகாப்பை அளிப்பதாகக் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் பிரான்ஸ் தனது முதல் தொகுதி அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளைப் பெற்றது, இது 273,600 அளவுகளைக் குறிக்கிறது.

இவை அனைத்தும் 65 வயதிற்கு உட்பட்ட சுகாதார நிபுணர்களுக்காக ஒதுக்கப்பட்டது, இதில் நரம்பியல் நிபுணரான வேரன் உள்ளடங்கினார்.

ஒரு சிறிய மருத்துவ சோதனை, நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் நோய்தொற்றின் மாறுபாட்டை தடுப்பதில் பயனுள்ளதாக இல்லை என்று பரிந்துரைத்தது.

தென்னாப்பிரிக்கா அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை அதன் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு பயன்படுத்துவதற்கான திட்டங்களை இடைநிறுத்திய பின்னர் வேரனின் கருத்துக்கள் வெளி வந்துள்ளன.

வேரனின் கூற்றுப்படி, பிரான்சில் பரவி இருக்கும் ‘குறைந்தது 99ம%’ வைரஸ்கள் தென்னாப்பிரிக்காவில் பரவலாக காணப்படும் வைரஸ் மாறுபாட்டுடன் ஒத்துப்போகவில்லை, ஆக அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பிரான்சில் திறம்பட செயற்படுகிறது.

இங்கிலாந்தில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டவை, உட்பட உலகின் பிற பகுதிகளிலிருந்து பரவலடைந்த வைரஸ் வகைகள் பரவாமல் தடுக்க புதிய நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுவதாக வேரன் கூறுகின்றார்.

எந்தவொரு வகை வைரஸ் பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தாலும் அல்லது வைரஸ் பாதித்திருக்கலாமென சந்தேகிக்கப்படும் எவருக்கும் சுய தனிமைப்படுத்தும் காலம் 7 ​​முதல் 10 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதுஇ என்றார்.

உதாரணமாக ஒரு மாணவர் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவுடன் வகுப்புகளை மூடுவதற்கான விரைவான தொடர்பு தடமறிதல் முயற்சிகள், மற்றும் வழிமுறைகளும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும்