இவ்வருடத்தின் குளிர்காலம் அதிக மழையுடன் பதிவாகியுள்ளது. இந்த குளிர்கால மழை பதிவு 1874 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இம்முறை பதிவாகியுள்ளது. டிசம்பர் 1 ஆம் திகதியில் இருந்து தொடர்ச்சியாக மழை பதிவாகி வருகின்றது. பெப்ரவரி 6 ஆம் திகதி வரை 245 மி.மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இது மிகப்பெரிய சாதனை முறியடிப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெப்ரவரி 6 ஆம் திகதி வரை பரிசில் 21 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. இச்சாதனை கூட 2003 ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகும் மழை வீச்சியாகும்.