கருப்பை மாற்றம் செய்ததன் பின்னர் பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
பெப்ரவரி 12 ஆம் திகதி Suresnes நகரில் உள்ள Foch மருத்துவமனையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இளம் பெண் ஒருவருக்கு கருப்பை மாற்றம் செய்ததன் பின்னர் அவர் எட்டு மாத கர்ப்பத்தின் பின்னர் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். இத்தகவலை மருத்துவமனை வட்டாரம் இன்று புதகிழமை காலை அறிவித்துள்ளது.
குழந்தை 1 கிலோவும் 845 கிராம் எடையும் கொண்டுள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
***
36 வயதுடைய Deborah எனும் பெண்ணே இவ்வாறு கருப்பை மாற்றப்பட்டவர் ஆவார். இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு கருப்பை மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இவருக்கு கருப்பையை தானம் வழங்கியது வேறு யாரும் இல்லை, இப்பெண்ணின் 57 வயதுடைய அவரது தாயாரே.
***
கருப்பை மாற்றப்பட்ட பெண் ஒருவர் குழந்த பெற்றுக்கொள்வது பிரான்சில் இதுவே முதன் முறையாகும்.