பரிசில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 35 கிலோ எடையுள்ள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 
 
பரிஸ் 20 ஆம் வட்டாரத்தின் Avenue Gambetta வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை காலை அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்த காவல்துறையினர், வீட்டை சோதனையிட்டனர். வீடுக்குள் இருந்து 31.3 எடைகொண்ட கஞ்சாவும், 2.7 கிலோ எடைகொண்ட மூலிகை கஞ்சாவும், €8.745 யூரோக்கள் ரொக்கப்பணமும் மீட்கப்பட்டது. 
 
மேலும், குறித்த வீட்டில் வசித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
நீண்ட மாதங்களாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் பின்னரே இந்த தேடுதல் மற்றும் கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
கடந்தவாரத்தில் பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 20 கிலோ எடைகொண்ட கஞ்சா மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.