கொரோனா வைரஸ் நோயாளிகளால் பரிஸ் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. 
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வரையான நிலவரப்படி, பரிசில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள அவசரப் பிரிவில் 52.2% வீதமான கட்டில்கள் நிரம்பியுள்ளதாக இல் து பிரான்சுக்கான பிராந்திய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
பரிசில் தற்போது 876 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 197 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
*
 
அதேவேளை இல் து பிரான்ஸ் மருத்துவமனை அவசர பிரிவில் இந்த எண்ணிக்கை 50% வீதத்தை ஏற்கனவே கடந்து, தற்போது 64.5% வீதமாக அதிகரித்துள்ளது. 
 
*
 
இல் து பிரான்சுக்குள் 60,760 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அவர்களில் 21,432 பேருக்கு இரண்டாவது கட்ட தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.