2வது ஊசி(பூஸ்டர்) அடித்த பின்னரே உங்கள் உடலில் முழு அளவிலான எதிர்ப்பு சக்தி தோன்றும். அதுவரை நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதனை பின்பற்றுங்கள். மேலும் 3 வகையான தடுப்பு ஊசிகள் பாவனையில் உள்ளதால், சில நடை முறைகள் வேறு படலாம். எனவே மருத்துவர்கள் ஊசி ஏற்ற முன்னர் அதற்காக அறிவுரைகளை மிகவும் தெளிவாக உங்களுக்கு தருவார்கள். அதனை பின்பற்ற வேண்டும். இது மிக அவசியமான விடையம் ஆகும்.
கொரோனா இருக்கு என்று தெரியாமல் சென்று தடுப்பூசி போட்ட தமிழர் சாவு
பிரித்தானியாவில் ஒரு தமிழர் நேற்று முன் தினம்(06) கொரோனா தொற்றால் சாவடைந்துள்ளார். அவரது வீட்டில் சுமார் 4 பேருக்கு மேல் வாடகைக்கு இருந்த நிலையில். வட்பேட்டில் உள்ள தமிழர் உணவகம் ஒன்றில் 2 பேரும், மற்றும் வட்பேட் பெஸ்ட் புட்டில் வேலை செய்யும் 2 பேரும் அவர் வீட்டில் தங்கி இருந்த நிலையில். குறித்த 4ல்வருக்கும் கொரோனா தொற்று இருந்துள்ளது.
அதனால் வயதான இன் நபருக்கும் கொரோனா தொற்றி இருந்துள்ளது. ஆனால் அவருக்கு அது தெரியவில்லை. இன் நிலையில் வட்பேட் மருத்துவமனை அன் நபருக்கு தடுப்பூசி போட வருமாறு அழைத்துள்ளார்கள் என்று அறியப்படுகிறது. ஏற்கனவே கொரோனா தாக்கத்தில் இருந்த இன் நபருக்கு தடுப்பூசி ஏற்றியதால். அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது என்று, சில மருத்துவர்கள் தெரிவித்தாலும். எதனையும் திட்டவட்டமாக மற்றும் உத்தியோக பூர்வமாக அவர்கள் சொல்கிறார்கள் இல்லை.
எமது உறவுகள் பலர் தற்போது தடுப்பூசி போடத்தயாராக இருக்கிறார்கள் ஆனால் அதனை யாரிடமும் பகிர்ந்துகொள்வதில்லை அவர்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்தாவிட்டால் அவர்களில் சிலர் உங்களின் உறவுகளும், நண்பர்களும் என பாதிக்கப்பட சந்தர்ப்பம் உள்ளது, இதனை அனைவருக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.