இராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணியினை பிரான்ஸ் ஆரம்பித்துள்ளது. அதற்குரிய பிரச்சாரங்களை ஆரம்பித்து மேற்கொண்டுள்ளது.
உயர்கல்வி பாடசாலைகளில், கல்லூரிகளில், இளையத்தளங்களில் என பல தளங்களில் இராணுவ ஆட்சேர்க்கைக்கு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுகளில் பல வீரர்கள் இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளனர். 2,000 இராணுவ வீரர்களை உடனடியாக இணைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாக இராணுவ அமைச்சகம் தெரிவிக்கிறது.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக 15,000 இராணுவத்தினர் நாடு முழுவதும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இஸ்லாமிய பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவதால், மேலதிக பாதுகாப்புக்காக இராணுவம் தேவைப்படுகிறதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக இராணுவத்தில் இருந்து வெளியேறும் வீரர்களின் எண்ணிக்கையும், வயதான - ஓய்வூதியம் பெறும் வயதெல்லையை நெருங்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும், இளம் இராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.