பிரித்தானிய அரசர் மூன்றாம் சாள்ஸ் (Charles III) புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டுவருவதாக அரசமாளிகை தெரிவித்துள்ளது.
அவர் உடல்நலக்குறைவில் இருந்து விரைவில் மீண்டு வரவேண்டும் என பல்வேறு உலகத்தலைவர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இது தொடர்பாக தனது X சமூகவலைத்தளத்தில் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.
'எங்கள் அனைத்து எண்ணங்களும் பிரிட்டிஷ் மக்கள் தொடர்பாக உள்ளன. எங்களது நட்பு தொடர்பாக உள்ளன!' என மக்ரோன் பதிவிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி, கனேடிய பிரதமர் உள்ளிட்ட பலரும் இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.