கேப்ரியல் அத்தால் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் அமைச்சரவையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. சில அமைச்சு பதவிகள் மாற்றப்பட்டுள்ளன.

அதேவேளை, ஊடகப்பேச்சாளராக Prisca Thévenot தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இளைஞர் பிரதிநிதியாக செயற்பட்டு வந்த நிலையில், தற்போது ஊடக பேச்சாளராக மாற்றப்பட்டுள்ளார்.

இவர் Hauts-de-Seine மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக இன்று பிற்பகல் பிரதமர் ஜனாதிபதியின் எலிசே மாளிகைக்குச் சென்று ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனைச் சந்தித்திருந்தார். 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த உரையாடலை அடுத்தே இந்த அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றன.