மூன்றாம் இலக்கம் கொண்ட Crit’air ஒட்டிகள் கொண்ட வாகனங்களுக்கு தலைநகர் பரிசில் விதிக்கப்பட்ட தடை, தற்போது பிற்போடப்பட்டுள்ளது.

வாகனங்கள் வெளியிடும் மாசடவை கணக்கிட்டு வழங்கப்பட்டுள்ள Crit’air ஒட்டிகள் (Stickers) ஆனது, 0 ல் இருந்து 5 ஆம் இலக்கம் வரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் அதிக மாசடவை வெளிப்படுத்தும் வாகனங்களான 4 மற்றும் 5 ஆம் இலக்கங்கள் கொண்ட வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 3 ஆம் இலக்க வாகனங்களுக்கும் தடை விதிக்கப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

2023 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதியில் இருந்து இந்த தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2024 ஆம் ஆண்டில் இறுதி வரை இந்த தடை பிற்போடப்பட்டுள்ளது.

இந்த தடையின் படி, தலைநகர் பரிசில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 8 மணியில் இருந்து இரவு 8 மணி வரை குறித்த 3 ஆம் இலக்க ஒட்டிகள் கொண்ட வாகனங்கள் பயணிக்க தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிப்படி மொத்தமாக 380,000 வாகனங்கள் பாதிக்கப்பட உள்ளன