13 வயதுடைய சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 17 வயதுடைய இளம் பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வருட ஆரம்பம் முதல் Les Pavillons-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து இருவரும் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அதிகளவான ஆண்கள் குறித்த வீட்டுக்கு வருவரை கவனித்த அருகில் வசிப்பவர்கள் சிலர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதையடுத்து அதிரடியாக நுழைந்த காவல்துறையினர் 17 மற்றும் 13 வயதுடைய இருவரைக் கைது செய்தனர்.
குறித்த 13 வயதுச் சிறுமி கடந்த டிசம்பர் மாதத்தில் அவரது வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அதன் பின்னர் ஜனவரி மாதத்தில் இருந்து குறித்த இளம் பெண்ணுடன் இணைந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் பரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.