காலவரையற்ற வேலை நிறுத்தத்துக்கு CGT தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தூய்மைப்பணியாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வரும் ஏப்ரல் 13 ஆம் திகதி முதல் காலவரையின்றி, ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது. ஓய்வூதிய சீர்திருத்தம் ‘தீங்கு விளைவிக்கக்கூடியது’ என குறிப்பிட்ட தொழிற்சங்கத்தினர், அதனை திருப்பப்பெறவேண்டும் எனவும் வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளதாக குறிப்பிட்டனர்.

கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள், கழிவு அகற்றம், கழிவு நீர் அகற்றம், தொற்று நீக்கி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தூய்மைப்பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.