வயதானவர்கள் மகிழுந்துகள் செலுத்தி விபத்துக்குள்ளாகுவது அதிகரித்துள்ளதை அடுத்து, சாரதி அனுமதி பத்திரத்துக்கு வயதெல்லை கொண்டுவருவது தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது.
குறிப்பாக 90 வயதுக்கு மேற்பட்டவர்களின் சாரதி அனுமதி பத்திரங்களை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை ஒன்று முன்மொழியப்பட்டது. ஆனால் இந்த கோரிகையை பிரதமர் Èlisabeth Borne நிராகரித்துள்ளார். ‘ஓட்டுனர் உரிமம் வயதைக் கணிப்பதற்காக வழங்கப்படுவதில்லை. ஓட்டுனர்களே இதனை உணரவேண்டும். தங்களால் வாகனத்தை செலுத்தமுடிமா என்பதை உணர்ந்து செயற்படவேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இந்த வார ஆரம்பத்தில் Berck-sur-Mer நகரில் 76 வயதுடைய சாரதி ஒருவர் மகிழுந்து செலுத்திய நிலையில், மகிழுந்து கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 12 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.