தலைநகர் பரிசில் சில இடங்களில் உள்ளது போல் அதன் புறநகரங்கள் சிலவற்றியும் வீதி வேகக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட உள்ளது.
Hauts-de-Seine மாவட்டத்தில் உள்ள 12 நகரப்பகுதிகளின் வீதிகளில் இந்த வேகக்கட்டுப்பாடு முதல்கட்டமாக கொண்டுவரப்பட உள்ளது. இங்கு மணிக்கு அதிகபட்சமாக 30 கி.மீ வேகமாக மட்டுப்படுத்தப்பட உள்ளது. இந்த கட்டுப்பாடாது பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக குறித்த மாவட்டத்தின் துணை முதல்வர் Jean-Claude Marquez தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் மிதிவண்டி சாரதிகளின் பாதுகாப்பு என்பவற்றைக் கருத்தில் கொண்டு மணிக்கு அதிகபட்சமாக 30 கி.மீ வேகம் மட்டுப்படுத்தப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.
இந்த கட்டுப்பாடு நடைமுறைக்கு வரும் திகதி குறித்து தெரிவிக்கப்படவில்லை என்றபோதும் வரும் மாதங்களில் நடைமுறைக்கு வரலாம் என அறிய முடிகிறது.