ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தினை சாதகமாக பயன்படுத்தி, நகைக்கடை ஒன்றில் இருந்து €25,000 யூரோக்கள் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
Rennes நகரில் இச்சம்பவம் ஏப்ரல் 15, சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அனுமதி வழங்கப்படாத ஆர்ப்பாட்டம் ஒன்று அன்றைய தினம் இடம்பெற்ற நிலையில், நகைக்கடை ஒன்றுக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அல்லது போராட்டக்காரர்கள் வேடமணிந்த கொள்ளையர்கள் சிலர் கடைக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
மொத்தமாக €25,000 ரொக்கப்பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் Rennes நகர காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.