கழிவு அகற்றும் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, பரிசில் குப்பைகள் குவிந்து வருகின்றன. பரிசின் வீதிகளின் கரையில் குப்பை மேடுகளாக காட்சியளிக்கிறது.
கடந்த மார்ச் 6 ஆம் திகதியில் இருந்து கழிவு அகற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை பரிசில் அகற்றப்படாமல் 4,500 தொன் குப்பைகள் குவிந்துள்ளன. குறிப்பாக பரிசின் 2 ஆம், 4 ஆம், 6 ஆம், 7 ஆம், 9 ஆம், 14 ஆம், 17 ஆம் மற்றும் 20 ஆம் வட்டாரங்களில் அதிகளவு குப்பைகள் குவிந்துள்ளன.
அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதாக பலர் விசனப்பட்டுள்ளனர்.
ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிடவேண்டும் என கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.