ஓய்வூதிய சீர்திருத்தத்தைக் கண்டித்து சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற உள்ளன.
ஓய்வூதிய சீர்திருத்தத்தைக் கண்டித்து இடம்பெறும் ஏழாவது நாள் ஆர்ப்பாட்டம் இதுவாகும். தலைநகர் பரிஸ் உட்பட நாடு முழுவதும் 230 ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன. இந்த ஆர்பாட்டங்களில் 800,000 தொடக்கம் 1 மில்லியன் பேர் வரை கலந்துகொள்வார்கள் என உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தலைநகரில் 70,000 இல் இருந்து 100,000 பேர் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.