பரிசில் தேங்கியிருந்த கழிவுகள் படிப்படியாக அகற்றப்பட்டு வருகிறது.

தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதை அடுத்து, காவல்துறையினர் மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த தூய்மைப் பணியை கையில் எடுத்துள்ளனர். கிட்டத்தட்ட 10,000 தொன் கழிவுகள் தேங்கியுள்ள நிலையில், இன்று திங்கட்கிழமை அதிகாலை முதல் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது.

நகரசபைக்குச் சொந்தமான 96 கழிவு வாகனங்களை பயன்படுத்தி இந்த கழிவு அகற்றும் பணியினை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

பணிகள் ஆரம்பித்து துரிதமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், முற்று முழுதாக கழிவுகள் அகற்றப்பட்ட இன்னும் காலம் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.