பிரெஞ்சு அரசாங்கத்தின் பலவந்த ஓய்வூதிய மாற்றுச் சட்டத்தினை எதிர்த்து எங்களின் போராட்டங்கங்கள் ஓயாது என தொழிற்சங்கங்கள் இன்று நிரூபித்துள்ளன.

கடந்த வாரம் பாராளுமன்ற முன்றலில் நடாத்திய போராட்டம் அரசை எதுவும் அசைத்திருக்கவில்லை. ஆனால் இன்று நாடுதழுவிய ரீதியில் நடாத்தப்பட்ட போராட்டங்களும் பணிப்புறக்கணிப்பும் பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதாகத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்தப் போராட்டத்தில் இரண்டு மில்லியன் மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

வழமைபோல் காவற்துறைத் தலைமையகம் இதனை குறைத்தே மதிப்பிட்டுள்ளன.

பரிசில் மட்டும் 450.000 (நான்கரை இலட்சம்) மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தடைகள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஏப்ரல் 6ம் திகதி முழுமையான பணிப்புறக்கணிப்பும் போராட்டமும் மீண்டும் நடாத்த உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.