Pantin (Seine-Saint-Denis) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து 14 கிலோ கஞ்சா போதைப்பொருள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் இப்போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று வியாழக்கிழமை நண்பகல் திடீரென குறித்த வீட்டுக்குள் நுழைந்த அதிகாரிகள், வீட்டினை சுற்றிவளைத்து அங்கிருந்த இருவரை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் வீடு சோதனையிடப்பட்டு, வீட்டுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கஞ்சா களியாகவும், உலர்ந்த செடிகளாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது